எமது சமூகத்தின் இருள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்ட தீபத்திருநாள் வழி செய்யட்டும் : இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

எமது சமூகத்தின் இருள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்ட தீபத்திருநாள் வழி செய்யட்டும் : இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

நீண்ட கால துன்பங்கள், துயரங்களை நிறைவு செய்துகொள்ள முடியாமல் போன நம் சமூகத்தின் மத்தியில் இருள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்ட தீபத்திருநாள் வழி செய்யட்டுமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தனது தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், அசுரன் என்ற இருள் நீங்கி நன்மையென்ற ஒளி பொங்கும் தீபத் திருநாளில் நமது மக்களின் வாழ்வில் வேதனையென்ற இருள் நீங்கி சோதனை வேதனை என்ற இருள் நீங்கி நம் அனைவரது வாழ்விலும் மறுமலர்ச்சி என்ற ஒளி பொங்க மனமார உளமார வாழ்த்துகிறேன்.

நீண்ட காலமாக பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து இன்று நிம்மதியான வாழ்வை எதிர்நோக்கி கொண்டிருக்கும் நமது தமிழ் சமூகம் மத்தியில் நிம்மதியான வாழ்வு கிட்டவும் சாந்தி சமாதானம் நிறைந்தநல்வாழ்வு நிலைத்திருக்கவும் இன்றைய நன்நாளில் இறைவனிடம் மன்றாடுகிறேன்.

மக்களின் மனங்களை இணைக்கும் மங்கள தீபாவளித் திருநாளில் நம் உறவுகள் மத்தியில் நல்லுறவு தழைத்தோங்கவும் நீண்ட கால துயரமான சூழலில் இன்னும் வேதனையின் விளிம்பிலிருந்து முழுமை பெறாத நமது சகோதரர்கள் மத்தியில் நிலவும் வறுமை நீங்கவும் ஏழ்மை ஒழியவும் நம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதற்கு நம் உறவுகள் இன்றைய நன்னாளில் திடசங்கற்பம் பூண வேண்டும்.

பல கொடுமைகளைச் செய்த நரகாசுரனான தனது புதல்வனை ஒழிக்க நீதி நிலை நாட்ட முன்வந்த பூமாதேவியின் நற் செயலை எம் வாழ்நாளில் கடைப்பி த்து நீதி நியாயம் எம்மத்தியில் தளைத்தோங்கச் செய்ய அனைவரும் முன்வர வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment