பீடைகொல்லி பதிவாளர் பதவி நீக்கம் : வர்த்தமானி அறிவிப்பும் வலுவிழப்பு - News View

Breaking

Tuesday, November 23, 2021

பீடைகொல்லி பதிவாளர் பதவி நீக்கம் : வர்த்தமானி அறிவிப்பும் வலுவிழப்பு

பீடைகொல்லிகள் பதிவாளர் Dr. ஜே.ஏ. சுமித் பதவி நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர், மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Glyphosate உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கான (Glyphosate, Propanil, Carbary1, Cholopyrifos, Carbofuran) தடையை நீக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்றையதினம் (22) வெளியிட்டமை தொடர்பில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அதி விசேட வர்த்தமானியும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னை அமைச்சரால் பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும், உரிய சட்ட அனுமதியின் அடிப்படையிலேயே குறித்த வர்த்தமானியை வெளியிட்டதாகவும் பீடைகொல்லிகள் பதிவாளர் ஜே.ஏ. சுமித் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment