இலங்கை மின்சார சேவை தொழிற் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து, கொலன்னாவை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக உள்ள பாதையில் நாளை புதன்கிழமை (3) முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (2) நிராகரித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு வெல்லம்பிட்டி பொலிஸார், கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம் முன் வைத்த கோரிக்கையே இவ்வாறு நிரகரிக்கப்பட்டது.
இடம்பெறவுள்ள ஆர்ப்பட்டம் ஒன்று தொடர்பில் தன்னால் உத்தரவொன்றினை பிறப்பிக்க முடியாது எனவும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரமும் பொலிஸ் அதிகரத்தின் பிரகாரமும் செயற்பட்டு ஆர்ப்பாட்டங்களின் போது செயற்பட முடியும் எனவும் சுட்டிக்காட்டியே நீதிவான் குறித்த் கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார்.
No comments:
Post a Comment