காமினி லொக்குகே, டிரான் அளஸ், சமன்பிரிய ஹேரத்திற்கு கொவிட் தொற்று - News View

Breaking

Tuesday, November 23, 2021

காமினி லொக்குகே, டிரான் அளஸ், சமன்பிரிய ஹேரத்திற்கு கொவிட் தொற்று

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டிரான் அளஸ் (தேசிய பட்டியல்), சமன்பிரிய ஹேரத் (குருணாகல்) ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த குறித்த மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், நேற்றையதினம் (22) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பில் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.ச. கட்சி எம்.பி. மனோ கணேசன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் அண்மையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment