தமிழ் முஸ்லிம் கட்சிகள் தேர்தலுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் செயற்பாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மிகத் தீவிரமாக உணரப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பின்னர் ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகளுடன் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுமா என்பது தொடர்பில் கேட்டபோது,
அனைத்துக்கும் சாத்தியப்பாடுகள் இருக்கின்றது தேர்தல் மட்டுமல்ல அனைத்து அரசியல் செயற்பாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மிகத் தீவிரமாக உணரப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை என்பது தொடர்பில் கேட்டபோது தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட இரு கட்சிகளுடனும் சிநேகபூர்வமான முறையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இன்று அடையாள ரீதியாகவே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம் அடுத்தடுத்த முறையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சந்திப்புக்களை மேற்கொள்வோம். அது மட்டுமன்றி இந்த சந்திப்பு தொடர்ந்து இடம்பெறும் என்றார்.
No comments:
Post a Comment