எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

பொலன்னறுவை வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13ஆம் திகதி குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது வீட்டில் வேறு எவரும் இல்லாத நிலையில் அயலவர்கள் அவரை உடனடியாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து உரிய அதிகாரிகள் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment