மற்றுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ! எவருக்கும் பாதிப்பில்லை ! - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

மற்றுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ! எவருக்கும் பாதிப்பில்லை !

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மைக் காலமாக சமையல் எரிவாயு கசிவின் காரணமாக அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குருணாகல் - நிக்கவரெட்டி பொலிஸ் பிரிவில் கந்தேகெதர பிரதேசத்திலும் இன்றையதினம் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (26) முற்பகல் வேலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்றும், எனினும் வீட்டிலுள்ள உடைமைகள் சேதமடைந்துள்ளதாகவும் நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சமையல் எரிவாயு கசிவின் காரணமாகவே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தாகவும் நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த மாதத்தில் பதிவாகியுள்ள 5ஆவது வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment