சீன நிறுவனத்தின் இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை ஆராயும் சட்டமா அதிபர் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

சீன நிறுவனத்தின் இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை ஆராயும் சட்டமா அதிபர் திணைக்களம்

(எம்.எப்.எம்.பஸீர்)

சீனாவில் இருந்து சேதனப் பசளையை இலங்கைக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனம், தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்திடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரி இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த இழப்பீட்டு கோரிக்கை கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், அக்கடிதம் தொடர்பிலும், அதன் சட்ட நியாயாதிக்கம் தொடர்பிலும் சட்ட மா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக திணைக்களத்தின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் அலட்சிய நடவடிக்கையால், தமது நிறுவனத்தின் நற் பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக இந்த தொகையை குறித்த நிறுவனம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அனுப்பட்டுள்ள இந்த கடிதம்,தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் பணிப்பாளர் ஊடாக மேலதிக சட்ட அலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment