பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் ரஞ்சனிடமும் வாக்குமூலம் பெற தீர்மானம் - News View

Breaking

Thursday, November 4, 2021

பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் ரஞ்சனிடமும் வாக்குமூலம் பெற தீர்மானம்

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகிய விடயங்கள் தொடர்பில், சிறைத் தண்டனை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலமொன்றை பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தும் பண்டோரா ஆவணம் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. 

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டதோடு ஆணைக்குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்துள்ளார். 

திருக்குமார் நடேசனின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வௌியாகிய விடயங்கள் தொடர்பில், சிறைத் தண்டனை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலமொன்றை பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

பண்டோரா ஆவணத்தில் உலக நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் முறைகேடாக சேர்த்த சொத்து தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதோடு இலங்கையில் திருக்குமார் நடேசனின் பெயர் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது தெரிந்ததே.

No comments:

Post a Comment