அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Wednesday, November 3, 2021

அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தமையை இரத்து செய்தல், அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‍கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment