சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்? : அனுமதி கோரியுள்ள விநியோக நிறுவனம் - News View

Breaking

Wednesday, November 3, 2021

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்? : அனுமதி கோரியுள்ள விநியோக நிறுவனம்

(இராஜதுரை ஹஷான்)

லாப் ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலையை மீண்டும் அதிகரிக்க லாப் எரிவாயு விநியோக நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளமை அறிய முடிகிறது.

லாப் ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலை கடந்த மாதம் 10 திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 984 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 393 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 2,840 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் லாப்ரக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.

12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலின்டரின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

அதேபோல் லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலின்டரின் விலை கடந்த மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலின்டரின் விலை 1,071 ரூபாவாகவும், 2.5 கிலோ கிராம் சிலின்டரின் விலை 506 ரூபாவாக காணப்படுகிறது.

சமையல் எரிவாயுவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதும் அதிகரித்தும் சமையல் எரிவாயு சிலின்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment