சுகாதாரம், கல்வித்துறைக்கு பட்ஜட்டில் அதிக நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கெஹலிய பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

சுகாதாரம், கல்வித்துறைக்கு பட்ஜட்டில் அதிக நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கெஹலிய பாராட்டு

நாட்டின் முக்கியமான துறையும் மக்களோடு நேரடியாக தொடர்புபடும் துறையுமான சுகாதாரத் துறைக்கும் கல்வித் துறைக்கும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரத் துறையை பொறுத்த வரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் சம்பந்தமாக முன்னெடுக்க வேண்டிய அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தொடக்கம் நடுத்தர மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முன்னொருபோதும் இல்லாத வகையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மேம்பாட்டுக்காக பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு துறைகளும் நாட்டில் தற்போது மிக முக்கியமான துறைகளாக பார்க்கப்படும் துறைகளாகும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்யக்கூடியதும் நேரடியாக மக்களோடு சம்பந்தப்படும் இரண்டு துறைகள் அவை.

இந்தத் துறைகள் தொடர்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதற்கான மேலும் தேவைகள் அதிகரிக்குமானால் நாம் திருத்தங்களை மேற்கொண்டு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment