டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கவலைக்கிடம் ! சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிப்பு ! உதவுமாறு மகன் வேண்டுகோள் - News View

Breaking

Thursday, November 25, 2021

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கவலைக்கிடம் ! சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிப்பு ! உதவுமாறு மகன் வேண்டுகோள்

தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குநராக பணிபுரிந்த நடன மாஸ்டர் சிவசங்கர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றவர்.

தனுசின் சூப்பர் டூப்பார் ஹிட்டான திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் இவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 

இது தவிர வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பரதேசி, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடிப்பிலும் பெயர் வாங்கினார். 

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் அவரது குடும்பம் திணறி வருகிறது

இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டரின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள். சிகிச்சைக்கு உதவுபவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

அஜய் கிருஷ்ணா (சிவசங்கர் மாஸ்டரின் மகன்) 9840323415

No comments:

Post a Comment