தீபாவளிக்கு மறுநாள் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை : ரூபனின் வேண்டுகோளுக்கிணங்க செந்தில் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

தீபாவளிக்கு மறுநாள் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை : ரூபனின் வேண்டுகோளுக்கிணங்க செந்தில் நடவடிக்கை

நாளை (04) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமான் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவிடம் வேண்டுகோள் விடுத்ததோடு இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானிடமும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதற்கமைய மாகாண ஆளுநர் விடுமுறை வழங்குவதற்கு உறுதியளித்ததாக செந்தில் தொண்டமானுக்கு தெரிவித்துள்ளார்.

நாளை (04) வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன் காரணமாக வெள்ளிக்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டுமென அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் ரூபன் பெருமாளிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையின் பிரகாரம் வெள்ளிக்கிழமை (05) சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார்.

தமது வேண்டுகோளை நிறைவேற்றிய சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவுக்கும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ரூபன் பெருமாள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

(அவிசாவளை நிருபர்- ரா. கமல்)

No comments:

Post a Comment