தடையின்றி மின் விநியோகிக்கப்படும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் : யுகதனவி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை - அமைச்சர் காமினி லொகுகே - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

தடையின்றி மின் விநியோகிக்கப்படும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் : யுகதனவி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை - அமைச்சர் காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

யுகதனவி மின் நிலையம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக தொழிற்சங்கத்தினரும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுப்படுவது பயனற்றது. மின்சார துண்டிப்பிற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 24 மணித்தியாலமும் தடையின்றி மின் விநியோகிக்கப்படும். அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகiயில், மின்சார சபையின் ஒரு சில தொழிற்சங்க சேவையாளர்கள் நேற்று முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தார்கள். இருப்பினும் அவர்களது போராட்டம் வெற்றி பெறவில்லை.24 மணித்தியாலமும் தடையின்றி மின் விநியோகிப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும.

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளராக மின்சார சபை தொழிற்சங்கத்தின் தலைவர் நேற்று முதல் 72 மணித்தியால மின் துண்டிப்பை மேற்கொள்ளும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னயின் அரசியல் நோக்கத்திற்காக மின் கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது என்பதை மின்சார சபையின் ஏனைய தொழிற்சங்கத்தினரும்,சேவையாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகளாவிய மட்டத்தில் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தால் நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வது சவால்மிக்கதாக உள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் விருப்பத்திற்கமைய சீனி, அரிசி, பால்மா ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படவில்லை. உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இச்சவாலை சீர் செய்ய அரசாங்கம் பல்வேறு உபாயங்களை வகுத்துள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்.

அதேபோல் யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்ககப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணினரும்,எதிர்க்கட்சியினரும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். அவர்களுடன் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் ஒன்றினைந்துள்ளார்கள்.

யுகதனவி மின் நிலையம் தனியார் துறையின் பங்குகளை ஒன்றினைத்து ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைய யுகதனவி மின் நிலையம் 2035ஆம் ஆண்டு அரசிற்கு முழுமையாக சொந்தமாகும். மின் நிலையத்தின் பங்குகள் நிரந்தரமாக அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை.

யுகதனவி மின் நிலையத்தில் இயற்கை திரவ எரிவாயு கட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை 2000ஆம் ஆண்டு முதல் பேசப்படுகிறது.

தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய மிதக்கும் கப்பல், எரிவாயு விநியோக குழாய் அபிவிருத்தி மற்றும் எரிவாயு விநியோகத்தை துரிதகரமாக செயற்படுத்துவதாக அமெரிக்க நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே யுகதனவி விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment