தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாடு இருண்ட யுகமாகும் : மதங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சி - அஸ்கிரி பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாடு இருண்ட யுகமாகும் : மதங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சி - அஸ்கிரி பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

இனங்களுக்கிடையிலான தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கியதாக அமையும். குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என அஸ்கிரி பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பல்லின சமூகத்தினர் வாழ்கிறார்கள். இருப்பினும் இன நல்லிணக்கம் இதுவரையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக காணப்படுகிறது.

கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளினால் ஒரு தரப்பினர் பயன் பெற்றுக் கொண்டதனை பல்வேறு சம்பவங்கள் ஊடாக அறிய முடிகிறது.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு எல்லை கடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கில் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை.

மதங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். பிரச்சினைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் பயனடைகிறார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அத்துடன் இன நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு மதத் தலைவர்கள். சமூகத்தை ஒன்றினைப்பதற்கு மதக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment