புகையிரத பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இருவரில் ஒருவர் புகையிரதத்தில் மோதி பலி - மற்றையவர் பாலத்திலிருந்து பாய்ந்து தப்பினார் - News View

Breaking

Friday, November 5, 2021

புகையிரத பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இருவரில் ஒருவர் புகையிரதத்தில் மோதி பலி - மற்றையவர் பாலத்திலிருந்து பாய்ந்து தப்பினார்

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (05) வெள்ளிக்கிழமை முற்பகல் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி கல்லாறு பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறு பாலத்தில் ஏறி தங்களது தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞன் பாலத்தின் கீழே பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தில் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா (21) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(மன்னார் விஷேட நிருபர்)

No comments:

Post a Comment