வெளிநாட்டினருக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

வெளிநாட்டினருக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா

இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருந்தால் வெளிநாட்டினர் 8ஆம் திகதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள்.

உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல பயணக் கட்டுப்பாடுகளை வெளிநாட்டினருக்கு அமெரிக்கா விதித்திருந்தது.

தற்போது ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தள்ளது. இந்த நிலையில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

அதன் முக்கிய அம்சங்கள்
இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8ஆம் திகதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா இல்லை என காட்டுகின்ற ‘நெகட்டிவ் ’ சான்றிதழை காட்ட வேண்டும். பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து இந்த சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவோ, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவோ இருந்தால், ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசியை போட்டுக் கொள்ளாத வெளிநாட்டினர் சிறிய குழுவினராக இருந்தால், அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர், சிறுமியர் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் அதே நேரத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும். (அதாவது இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட பெரியவர்களுடன் பயணத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும், தடுப்பூசி போடாத பெரியவர்களுடன் செல்கிறபோது ஒரு நாளுக்குள்ளும்).

No comments:

Post a Comment