"மொனுபிரவியர்" கொவிட் மாத்திரை குறித்து அவதானம் : சுகாதார பணிப்பாளரிடம் ஆராயுமாறு சன்ன ஜயசுமன கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

"மொனுபிரவியர்" கொவிட் மாத்திரை குறித்து அவதானம் : சுகாதார பணிப்பாளரிடம் ஆராயுமாறு சன்ன ஜயசுமன கோரிக்கை

கொவிட்-19 தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் உயிரிழக்கும் அபாயத்தைக் குறைப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொனுபிரவிய(ர்) (Molnupiravir) என்ற மருந்தை, இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது.

ஒளடத உற்பத்தி மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கடிதம் ஒன்றினூடாக இந்த விடயத்தை வினவியுள்ளார்.

வாய் வழியாக வழங்கப்படும் இந்தத் தடுப்பு மருந்து, கொவிட் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மற்றும் மரணத்திற்கு உள்ளாகும் நிலையை சுமார் 50 சதவீதம் தடுக்கும் என மெர்க் ஒளடத நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த மருந்து பல நாடுகளால் பரிந்துரைக்கப்பட்டு, முன்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மொனுபிரவிய(ர்) மருந்தை, இலங்கையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் முறைமை குறித்து, கொவிட் நிபுணர் குழுவின் கருத்தைத் தமக்கு அறியப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.

அதேநேரம், இந்தப் புதிய மருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியத்தன்மை இருக்குமாயின், அது குறித்து செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆலோசனை வழங்குமாறும், இராஜாங்க அமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment