தெதுரு ஓயா வான் கதவுகள் திறப்பு ! தாழ் நிலப் பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்தவும் ஆலோசனை - News View

Breaking

Wednesday, November 24, 2021

தெதுரு ஓயா வான் கதவுகள் திறப்பு ! தாழ் நிலப் பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்தவும் ஆலோசனை

தெதுரு ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக, நீர்த் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தாழ் நிலப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா நீர்த் தேக்கத்தின் பல பகுதிகளில் நேற்று (24) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக வினாடிக்கு 27,800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தெதுரு ஓயா படுக்கையில் இன்னும் சில மணித்தியாலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படுலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பில் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் - குருணாகல் வீதியில் எபவலபிட்டி பிரதேசம் தற்போது நீரில் மூழ்கியுள்ளதால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment