நாட்டின் நிலப்பரப்புக்களை வெளிநாடுகளுக்கு கொடுத்துள்ளமையால் எமது மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர் - சிதம்பரம் கருணாநிதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

நாட்டின் நிலப்பரப்புக்களை வெளிநாடுகளுக்கு கொடுத்துள்ளமையால் எமது மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர் - சிதம்பரம் கருணாநிதி

நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள நிலப்பரப்புக்களை சீனர்களுக்கு மஹிந்த - ரணில் - கோட்டா ஆகியோர் கொடுத்துள்ளமையால் எமது மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.

நமது நாட்டிற்குள் நுழைந்திருக்கும் சீனா யாழ் தீவுகளில் இருந்து இந்தியாவை நோக்கி தாக்குமானால் நிச்சயமாக இந்தியா திரும்பத் தாக்கும். அவ்வாறு அவர்கள் தாக்கப்போவது சீனர்கள் நிலை கொண்டிருக்கும் வடக்கு வாழ் தமிழர்களின் தீவுகளுக்கேவாகும். எனவே வடக்கு தமிழர்கள் அழியும் நிலை ஏற்படலாம். ஆதலால் அரசாங்கம் இவ்விடயத்தில் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு என நாட்டின் முக்கிய பகுதிகளிலுள்ள பெறுமதியான நிலப்பரப்புக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது இன்று நடந்திருக்கிறது. இந்தியாவுக்கு மிகவும் அண்மையிலுள்ள நமது நிலப்பரப்புக்களை இலங்கை சீனாவுக்கு தாரைவார்த்திருப்பது எமது நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சொல்லப்படுகிறது.

இலங்கையின் சீனமயமாக்கள் எதிர்காலத்தில் இலங்கையை சீனாவின் கொத்தனியாக மாற்றிவிடக்கூடும். அத்தோடு இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு தளமாகக்கூட இலங்கையை பயன்படுத்திக்கொள்ளக் கூடும்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதானது பூகோள அரசியலிலும் இன்னும் இதர துறைகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும். ஆகையால் இலங்கையும் இந்தியாவும் இந்த விடயத்தில் கூர்ந்து அவதானித்து சிறந்த முடிவெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கேசரி

No comments:

Post a Comment