ஜெர்மனியில் மேர்கலின் அரசை முடிவுக்கு கொண்டுவர கூட்டணி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

ஜெர்மனியில் மேர்கலின் அரசை முடிவுக்கு கொண்டுவர கூட்டணி

ஜெர்மனியில் எங்கலா மேர்க்கல் தலைமையிலான 16 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மூன்று கட்சி கூட்டணி அரசு ஒன்றுக்கு ஒலாப் ஸ்கோல்ஸ் தலைமை வகிக்கவுள்ளார்.

ஸ்கோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற கூட்டாட்சித் தேர்தல்கள் இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், பசுமையாளர்கள் மற்றும் வணிக நட்பு சுதந்திர ஜனநாயகவாதிகளுடன் அவர் கூட்டுச் சேர்ந்துள்ளார்.

காலநிலை பாதுகாப்பு அம்சங்கள் இந்த கூட்டணி உடன்படிக்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

திட்டமிடப்படுவதை விடவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2030 இல் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர இந்த கட்சிகள் இலக்கு வைத்துள்ளன. 

ஜெர்மனியில் 2 வீதம் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவும், ஹைட்ரஜன் அடிப்படையிலான ஆற்றல் பற்றியும் இந்த கூட்டணி அவதானம் செலுத்தவுள்ளது. 

2030 இல் 80 வீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுவதற்கும் ஜெர்மனி வீதிகளில் 15 மில்லியன் மின்சார கார்களை ஈடுபடுத்தவும் இந்த கட்சிகள் விரும்புகின்றன.

No comments:

Post a Comment