பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 பேர் கைது

(எம்.மனோசித்ரா)

கிளிநொச்சி - தர்மபுறம் பொலிஸ் பிரிவில் பிரமந்தாறு பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி இரு தரப்பினருக்கிடையில் மோதல் தொடர்பில் விசாரணைகளுக்காகச் சென்ற தர்மபுறம் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விழைவிக்கப்பட்டதோடு, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிரதேசத்திலுள்ள சிலரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தார்.

இவ்வாறு பொலிஸாரை தாக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 சந்தேகநபர்கள் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ராஜகிரிய பிரதேசத்தில் தொழில் புரிந்து வருவதாக நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 23, 25 மற்றும் 28 வயதுகளையுடைய தர்மபுற மற்றும் பிரமந்தாரு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment