ஆளுங்கட்சி குப்பையை அவர்களே கிளரும் நிலையில் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும் - அனுரகுமார திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

ஆளுங்கட்சி குப்பையை அவர்களே கிளரும் நிலையில் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும் - அனுரகுமார திசாநாயக்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஆளுங்கட்சி குப்பையை அவர்களே கிளரும் நிலையில் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், விவசாயத்துறை அமைச்சர் நேற்று சபையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் பாவித்த வாகனங்கள், அவரது வீட்டின் நீளமும் அகலமும் குறித்தெல்லாம் பேசினார். 

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் ஆட்சி செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தவறான செயற்பாடுகள் குறித்து குற்றம் சுமத்தினார். 

அவர் விமானங்களை பாவித்த முறைமை, ஹெலிகொட்பர்களை பாவித்த விதம் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தற்போதைய ஜனாதிபதி எவ்வாறு மக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்கின்றார் என்ற விடயங்களையும் சபையில் கூறினார்.

சபையில் இருந்து கொண்டு நாம் நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்ககின்றோம். இதன்மூலம் இந்த நாட்டிற்கு என்ன சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த குப்பைகளை மேலும் கிளறினால் அதிகமாக நாற்றம் வீசும் என்பதையும் மேற்படி இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனால் இந்த குப்பைகளை அனைவரும் ஒன்றிணைந்து மூடிவிடுவார்கள். அதற்கான பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவார்கள் என்பது எமக்குத் தெரியும்.

எவ்வாறெனினும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அப்பாவி நாட்டு மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment