அறநெறி பாடசாலைகள் 28ஆம் திகதி முதல் ஆரம்பம் - News View

Breaking

Thursday, November 25, 2021

அறநெறி பாடசாலைகள் 28ஆம் திகதி முதல் ஆரம்பம்

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டிலுள்ள இந்து அறநெறிப் பாடசாலைகளை எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சுகாதார நெறிமுறைக்கிணங்க மீளத் திறக்குமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

அறநெறிப் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு வசதியாகப் பெற்றோர், அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினர், பொறுப்பான உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உரிய சுகாதர நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டும். எனவே, இந்த விடயத்தில் சகலரும் கவனம் செலுத்துமாறும் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment