மூன்று மாதங்களாகக் குமுறும் ஸ்பெயின் தீவிலுள்ள எரிமலை : 260 மில்லியன் டொலர் பொருள் இழப்பு : 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை இழந்துள்ள மக்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

மூன்று மாதங்களாகக் குமுறும் ஸ்பெயின் தீவிலுள்ள எரிமலை : 260 மில்லியன் டொலர் பொருள் இழப்பு : 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை இழந்துள்ள மக்கள்

ஸ்பெயின் லா பால்மா தீவில் உள்ள கூம்பரே பியுகா எரிமலையில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது போன்று தீக்குழம்பு வெளியேறி வருகிறது.

3 மாதங்களை தாண்டி எரிமலை தொடர்ந்து குமுறி வருகிறது. உள்ளுர் முழுவதும் சாம்பல் கழிவுகள் சூழ்ந்த நிலையில் தற்போது எரிமலையின் அண்டை கிராமமான லா லாகுனாவை தீக்குழம்பு கபளீகரம் செய்து வருகிறது.

சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முழு நேர முகாம்வாசிகளாகவே மாறினர். சுமார் 260 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் லா பால்மா தீவின் கும்ப்ரே வியஜா எரிமலையிலிருந்து வெளியேறும் தீப்பிழம்பு கடலில் கலந்து விஷப் புகையை வெளியிட்டு வருவதால், கடலோர நகரங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலையில் மூன்றாவதாக உருவாகியுள்ள துளையிலிருந்து வெளியேறி வரும் தீப்பிழம்பு கடலில் கலந்து சல்பர் டையொக்ஸைட் உள்ளிட்ட விஷ வாயுக்களை வெளியிட்டு வருகிறது.

இதனையடுத்து டசகோட், சான் பொரொன்டொன் மற்றும் எல் கார்டொன் நகரங்களில் வாழும் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment