திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி கர்ப்பம் : சகோதரியின் கணவர் தலைமறைவு - News View

Breaking

Tuesday, November 23, 2021

திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி கர்ப்பம் : சகோதரியின் கணவர் தலைமறைவு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட இருவரை நேற்று திங்கட்கிழமை (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15 வயது சிறுமி தாய் மற்றும் திருமணம் முடித்த சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சகோதரியின் கணவன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பிணியாகியுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் சகோதரியின் கணவர் தலைமறைவாகியதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தலைமறைவாகிய நபரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய தாயார் மற்றும் சிறுமியின் 24 சகோதரி ஆகிய இருவரையும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைது அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.

கேசரி

No comments:

Post a Comment