(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கான மருத்துவ உபகரணங்களை கொள்வளவு செய்வதற்காக தேசிய தொற்றுநோய் நிறுவனம் (ஐ.டி.எச்.) மற்றும் களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு 13.46 மில்லியன் ரூபாவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதன்படி மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு 9.73 மில்லியன் ரூபாவும், களுபோவில வைத்தியசாலைக்கு 3.73 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, குறித்த வைத்தியசாலைகளின் அதிகாரிகளுடம் கையளித்தார்.
கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா, பிரதான நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, நாட்டின் சமூகப் பொறுப்பு உணர்ந்து செயற்பட்டு வரும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment