தங்க கடத்தலில் 10 இலங்கையர்கள் ! பெங்களூர் விமான நிலையத்தில் கைது - News View

Breaking

Tuesday, November 23, 2021

தங்க கடத்தலில் 10 இலங்கையர்கள் ! பெங்களூர் விமான நிலையத்தில் கைது

பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உடலில் மறைத்து வைத்து சூட்சுமமாக தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆண்களையும் எட்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

இந்திய சுங்கப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானமான UL 171 இல் 140 பயணிகளுடன் இணைந்து பெங்களூருக்கு பயணித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 1 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவலை அடிப்படையாக கொண்ட தங்கக் கடத்தலில் தொடர்புடைய முழு கும்பலையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment