14 மில்லியன் ரூபாவை டுபாய்க்கு கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது - News View

Breaking

Tuesday, November 23, 2021

14 மில்லியன் ரூபாவை டுபாய்க்கு கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

20,000 அமெரிக்க டொலர்கள் உட்பட 1 கோடியே 40 இலட்சத்து 60,000 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முற்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவரிடமிருந்து 10 மில்லியன் இலங்கை ரூபாவும் 20,000 அமெரிக்க டொலர்களும் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 27 வயதான வர்த்தகர் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

No comments:

Post a Comment