இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது பூர்வீக வயல் காணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நெல் விதைப்பினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
விவசாய நிலங்கள் அனைத்திலும் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செய்கை பணிகளை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.
பெரும்போக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப் பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையிலேயே எம்.ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளையிலுள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாயபூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார்.
No comments:
Post a Comment