உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HND) பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி நடாத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்
இதற்கு முன்னர் இப்போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான வினாப்பத்திரங்கள் கசிந்தமை தொடர்பில் அப்பரீட்சை செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் விசாரணை மேற்கொள்ளுமாறு சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் அடிப்படையில் குறித்த பரீட்சை நடைபெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த போட்டிப் பரீட்சை இம்மாதம் 30ஆம் திகதி நடாத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மாகாண பொதுச் சேவை ஆணை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பரீட்சை தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி அட்டை கிடைக்காவிடின், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment