வெட்டுப் புள்ளிகள் இன்னும் இரு வாரத்தில் வெளியிடப்படும் - News View

Breaking

Monday, October 18, 2021

வெட்டுப் புள்ளிகள் இன்னும் இரு வாரத்தில் வெளியிடப்படும்

2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இம்முறை 44,000 மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இணைவதற்காக இம்முறை ஒரு இலட்சத்து ஐயாயிரத்திற்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

வெட்டுப் புள்ளிகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ugc.ac.lk இல் வெளியிடப்படும்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்கிய மூன்றாவது கொவிட்-19 அலையின் தாக்கம் காரணமாக உண்டான பல சிக்கல்களினால் வெட்டுப் புள்ளிகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர்.

No comments:

Post a Comment