அரசாங்கத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ள பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர் - News View

Breaking

Monday, October 18, 2021

அரசாங்கத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ள பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர்

(இராஜதுரை ஹஷான்)

கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

அந்த அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கலில் அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்திற்கு இயற்கை திரவ வாயு விநியோக ஒப்பந்தத்தை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, அமைச்சரவையின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர்,மற்றும் சட்டமாதிபர் உள்ளிட்ட 54 பேர் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்.என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனுவில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினராக அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment