பெரும்போக விவசாயத்திற்கு தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்யத் தீர்மானம் - News View

Breaking

Saturday, October 2, 2021

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்யத் தீர்மானம்

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான சேதனப் பசளையை இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரமற்ற உரங்களை ஒருபோதும் இறக்குமதி செய்யமாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளையின் மாதிரிகளில் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சீன நிறுவனம் வருத்தம் வெளியிட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளை மாதிரிகளை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பொருத்தமான சேதனப் பசளையை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இம்மாதம் 15 ஆம் திகதி பெரும்போக விவசாய நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment