குடிநீர் விநியோகம் தொடர்பில் இலங்கை கியூபா விசேட நிபுணர்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்டம் - News View

Breaking

Friday, October 1, 2021

குடிநீர் விநியோகம் தொடர்பில் இலங்கை கியூபா விசேட நிபுணர்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்டம்

கியூபா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச நீர் வழங்கல் நிறுவனத்தின் விசேட நிபுணர்களின் அறிவு மற்றும் ஒத்துழைப்பை இலங்கை நீர் வழங்கல் செயல் திட்டத்திற்கு வழங்குவதற்கு கியூபா அரசு விரும்புவதாகவும் இலங்கையில் நீர் வழங்கல் தொடர்பான பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் அறிவை கியூபாவுக்கு வழங்குமாறும் கியூப தூதுவர் அந்ரோயஸ் மாச்சொளோ கொன்ஸாலெஸ் காரிடோ அவர்கள் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கியூப தூதுவர் இன்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சில் சந்தித்தபோதே இந்த வேண்டுகோளை விடுத்தார்.

கியூபா அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நீண்டகால நட்பு இருப்பதாகவும் அந்த நட்பை வலுப்படுத்தும் வகையில் உங்களது வருகையை பாராட்டுவதாகவும் இதன்போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர் வழங்கல் தொடர்பில் கியூப அரசின் விசேட நிபுணர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்வதற்கு எமது அமைச்சு விருப்பத்துடன் இருப்பதாகவும் இலங்கையின் விஷேட அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்களின் அறிவை மற்றும் ஒத்துழைப்பை நீங்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க கியூபா அரசின் நீர் வழங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கியூப தூதுவரின் வேண்டுகோளை காலம் தாழ்த்தாமல் இன்றே ஆரம்பிப்பதாக இதன்போதே அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நீர் வளங்கள் அமைச்சரின் ஆலோசகர் சந்தக குணசேகர ஒருங்கிணைப்புச் செயலாளர்களான டி.வி.டி திலகசிறி மற்றும் டட்லி கலன்சூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment