இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

Add+Banner

Friday, October 1, 2021

demo-image

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன்

.com/img/a/
இலங்கையிலுள்ள கிராமிய வீதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கை திட்டத்திற்கமைவாக 100,000 கி.மீ வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை உலக வங்கி வரவேற்றுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளதால், கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் காலநிலைகளுக்கு ஏற்ற வகையில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் திட்டமாகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி திட்டமாகவும் செயல்படுத்த உலக வங்கி இந்த தொகையை இலங்கை வழங்குவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய சுமார் 3000 கி.மீ நீளமான வீதிகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு கிராமப்புறங்களில் விவசாய பயிர் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் பயிர் சேமிப்பு களஞ்சியங்களையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *