கல்முனை விடயத்தில் நியாயத்தை விட தமிழ் கூட்டமைப்பின் உறவே ஹக்கீமுக்கு அவசியம் - சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை - News View

Breaking

Sunday, October 3, 2021

கல்முனை விடயத்தில் நியாயத்தை விட தமிழ் கூட்டமைப்பின் உறவே ஹக்கீமுக்கு அவசியம் - சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை

நூருல் ஹுதா உமர்

தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்தோடு பயணிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சாடுவதன் உண்மையான நோக்கம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை தடுப்பதுதான். தமிழ் அரசியல்வாதிகளுக்கு வட-கிழக்கு இணைப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோன்ற முக்கியமான விடயமாகத்தான் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி அதன் எல்லைகளை பலப்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். அதற்கு தடையாக ஹரீஸ் எம்.பி இருக்கின்றார் என்ற காரணத்திற்காகவே எப்படியாவது அரசாங்கத்தை விட்டு இவரை வெளியேற்றிவிட வேண்டும் என்று கடும் பிரயத்தனம் செய்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இதற்கு மறைமுகமான ஆதரவை ஹக்கீமும் வழங்கி வருகின்றார் என கல்முனை சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் சூடுபிடுத்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மு.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரின் அறிவிப்புக்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தனது அறிக்கையில் மேலும், கல்முனை துண்டாடப்பட்டால் அதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தான் என்று அவர் மேல் பழியைபோட்டு கல்முனை அரசியலிலிருந்து ஹரீசை ஒட்டு மொத்தமாக ஓரம்கட்டிவிடலாம் என்பதுதான் மு.கா தலைவரின் திட்டமாகுமென்றே என்னத்தோன்றுகிறது. 

எது எப்படியிருந்தாலும் கல்முனை பிரச்சினையை பிச்சைக்காரனின் புண்னாக வைத்துக் கொண்டு காலாகாலமும் அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த ஹரீஸ் அவர்களுக்கு ஆட்சி மாற்றமானது பெரும் தலையிடியாகவே மாறியிருந்தது.

அதன் காரணமாகவே ஆளும் அரசாங்கத்தோடு சேர்ந்து பயணிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளினால் கல்முனை துண்டாடப்படலாம் என்ற ஐயத்தின் காரணமாகவே அரசாங்கத்தோடு சேர்ந்து பயணிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விரும்பியிருந்தார் என்பதே உண்மையாகும். 

ஹரீஸ் எம்பி அரசாங்கத்தோடு சேர்ந்து பயணிக்காது விட்டிருந்தால் கல்முனை என்ற நகரம் முஸ்லிம்களின் கையைவிட்டு எப்பவோ சென்றிருக்கும். இந்த விடயத்தில் சுமந்திரன், சாணக்கியன், கருணா, வியாழேந்திரன் போன்ற எம்பிமார்கள் கட்சி பேதமற்று ஒன்றான சிந்தனையுடன் பயணிக்கின்றார்கள் என்பது வெள்ளிடை மழையாகும்.

அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தலைவர் ஹக்கீமும் ஹரீஸ் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றே விரும்புகின்றார். அவருக்கு தேவை கல்முனை பிரச்சினையல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவுதான் அவருக்கு தேவையாக இருக்கின்றது. 

இந்த விடயங்களை கல்முனை மக்களோ அல்லது கல்முனையை சேர்ந்த கட்சி போராளிகளோ அல்லது கல்முனை மீது பாசம் கொண்ட இயக்கங்களோ கண்டுகொண்டதாக தெரியவில்லை என்றே கூறவேண்டும். 

இந்த விடயங்களின் உண்மைத் தண்மையை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடுகின்றார் என்பதே நூறுவீத உண்மையாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment