பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - News View

Breaking

Sunday, October 3, 2021

பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 4 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் அந்தக் காரில் பயணம் செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாரதியின்  கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இரவு நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை.

மறுநாளான நேற்று ஆற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்படுவது குறித்து மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் காரை மீட்டனர்.

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment