(இராஜதுரை ஹஷான்)
தேசிய வளங்களை பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திடமில்லை. முதலீடு என குறிப்பிட்டுக் கொண்டு தேசிய வளங்கள் அந்நிய தரப்பினருக்கு தாரைவார்க்கப்படுகின்றன. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணியாக அமையும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும், அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய வளங்களை பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. மிகுதியாக இருப்பதையும் விற்கும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது. கெரவலபிட்டிய மின் நிலையத்தின் பங்குகள் இரகசியமான முறையில் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இதுவரையில் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை. அவ்வாறாயின் அந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றே கருத வேண்டும்.
முதலீடு என குறிப்பிட்டுக் கொண்டு தேசிய வளங்கள் அந்திய நாட்டவர்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. நாட்டுக்கு பயன்பெறும் முதலீடுகள் தொடர்பில் தற்போதைய அரச தலைவர்கள் தெளிவு பெற வேண்டுமாயின் முன்னதாக ஆட்சி செய்த தலைவர்கள் நாட்டுக்கு கொண்டு வந்த முதலீடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment