பதுளை மாவட்டத்தின் பம்பரகந்தை நீர் வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஐவர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி, ஹல்துமுல்ல அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஹல்துமுல்ல பகுதியின் பம்பரகந்தை நீர் வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து நீர் வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஐந்து இளைஞர்கள் குறித்த பகுதிக்கு சென்றனர். அவ்வேளையில் காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. இதனால் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்து, அதிலிருந்த குளவிகள் குறிப்பிட்ட ஐவரையும் கொட்டத் தொடங்கின.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் தீயைப் பற்ற வைத்து, புகையை எழுப்பியதும் குளவிகள் அங்கிருந்து அகன்றன. இதன் பின்னர் அங்கு கூடியவர்கள் குளவிகள் கொட்டிய ஐவரையும், ஹல்துமுள்ளை அரசின வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment