இளைஞர்களுக்கு நாட்டம் ஏற்படுத்த தனியார் துறைக்கும் ஓய்வூதிய திட்டம் அவசியம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Saturday, October 16, 2021

இளைஞர்களுக்கு நாட்டம் ஏற்படுத்த தனியார் துறைக்கும் ஓய்வூதிய திட்டம் அவசியம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

இளைஞர்களுக்கு தனியார் துறையில் நாட்டம் ஏற்படுத்துவதற்காக தனியார் துறைக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம் வகுப்பதற்காக கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் துறையில் பல வேலைகள் இருப்பதால் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கமாட்டார்களென தெரிவித்த அவர், இருப்பினும், இளைஞர்களிடையே தனியார் துறையில் வேலை தேடும் போக்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் துறைக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். ஓய்வூதியத் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியை அறிமுகப்படுத்துதல், கொரோனாவால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஒரு சமூகப் பாதுகாப்பு நிதி நன்மை பயக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்காலிகத் தீர்வுகள் ஒரு தீர்வல்ல. ஊழியர்களைப் பாதுகாக்க நீண்ட காலத்திட்டம் தேவை. அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக இரு திட்டங்களை வகுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment