இலங்கை ரக்பி ஜாம்பவான் சந்திரிஷன் பெரேரா இன்று (24) காலமானார்.
கடந்த ஒரு வருட காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சந்திரிஷன் பெரேரா, இன்று நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
இவர் இலங்கை ரக்பி அணியின் தலைவர், பயிற்சியாளர், உடற்பயிற்சி பயிற்சியாளராக செயற்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர் மற்றும் வர்ணனையாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 1992 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், அந்த அணியின் ஊடக மேலாளராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment