ஆசியான் உச்சி மாநாட்டுக்கு அழைக்கப்படாத மியான்மர் ராணுவ ஆட்சியாளர் - News View

Breaking

Monday, October 18, 2021

ஆசியான் உச்சி மாநாட்டுக்கு அழைக்கப்படாத மியான்மர் ராணுவ ஆட்சியாளர்

இம்மாதப் பிற்பாதியில் இடம்பெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் மியன்மாரின் ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரைச் சேர்த்துக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதில் அரசியல் சார்பற்ற பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்வார் என்றும் அது கூறியது.

மியன்மாரில் நிலவும் கொந்தளிப்பை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஆசியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மியன்மார் இராணுவம் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை என்று அறிக்கை ஒன்று கூறியது.

கடந்த பெப்ரவரி மாதம் மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது.

மியன்மாரின் முன்னாள் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூச்சியைச் ஆசியான் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு இராணுவ ஜெனரல்கள் அனுமதி வழங்க மறுத்ததும் ஆசியான் தலைவர்களைச் சினமடையச் செய்தது.

ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத நிலையில் இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த முடிவுக்கு மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment