(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்துக்கோ விற்பனை செய்வதை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதனை கண்டிப்பதற்கான பொறுப்பு மக்களுக்கும் உண்டு. ஜனாதிபதி தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை மறந்து விட்டு, தற்போது மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்தார்.
நாட்டில் அமெரிக்க டொலரின் கையிருப்பு இல்லாததானால் எமது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு - தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனை, கொழும்பிலுள்ள கட்டடிடங்கள், கெரவலப்பிட்டி மின்நிலைய பங்குகள் ஆகிவற்றை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளுக்கும் , வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்து வருகின்றமையை கண்டித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹுமான், சரத் பொன்சேகா, காவிந்த ஜயவர்ன உள்ளிட்டவர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
No comments:
Post a Comment