அமெரிக்காவில் மூவரை கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - News View

Breaking

Thursday, October 7, 2021

அமெரிக்காவில் மூவரை கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அவருக்கு அறிவுசார் குறைபாடு இருப்பதாக விடுக்கப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏர்னஸ்ட் ஜோன்சன் மீதான மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான கோரிக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ஒரு நாளைக்கு முன் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு விச ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

எனினும் பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் 61 வயதான ஜோன்சனின் கருணை மனு இருந்தமை குறிப்பித்தக்கது.

ஜோன்சனின் அறிவுத்திறன் மூன்றாம் தர வகுப்பு சிறுவன் ஒருவனின் அளவே இருப்பது என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணறிவுச் சோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர் மரண தண்டனைக்கு தகுதியற்றவர் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர்.

No comments:

Post a Comment