சர்வதேச நாடுகளுக்கு தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தும் அவுஸ்திரேலியா - News View

Breaking

Friday, October 1, 2021

சர்வதேச நாடுகளுக்கு தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தும் அவுஸ்திரேலியா

எதிர்வரும் நவம்பரில் நாட்டின் சர்வதேச எல்லைகளை திறப்பதாக அறிவித்திருக்கும் அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுப்பூசி பெற்ற பிரஜைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் தொடக்கம் அவுஸ்திரேலியா, சில அவுஸ்திரேலியர்கள் மற்றும் ஏனையோருக்கு மாத்திரமே நாட்டுக்குள் வர அனுமதி அளித்து வருகிறது. வெளிநாட்டுப் பயணங்களும் விதிவிலக்கு இன்றி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான கொள்கை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்பட்டபோதும், இதனால் சர்ச்சைக்குரிய முறையில் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 80 வீதத்திற்கு குறைவான தடுப்பூசி பெற்றவர்களை கொண்ட நாடாக இருக்கும் அவுஸ்திரேலியா, புதிய பயணச் சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது.

‘அவுஸ்திரேலியர்கள் தமது வழக்கமான வாழ்வுக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு பயணங்கள் உடன் திறக்கப்படாதபோதும், எமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் செயற்பாடுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய அரசு குறிப்பிட்டுள்ளது.

தற்போது கட்டாயப் பணிகள் அல்லது இறக்கும் உறவினர்களை பார்ப்பது போன்ற விதிவிலக்கான நேரங்களில் மாத்திரமே அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment