மாகாண சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் - கயந்த கருணாதிலக - News View

Breaking

Monday, October 18, 2021

மாகாண சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் - கயந்த கருணாதிலக

(நா.தனுஜா)

மாகாண சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் கயந்த கருணாதிலக வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகின் ஏனைய நாடுகள் கல்வித் துறைக்கான முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்ற போதிலும், தற்போதைய அரசாங்கம் நடை பாதைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேர்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளில் முதலீடு செய்வதையே மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றது.

எனவே மாகாண சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மன நிறைவுடன் பணியாற்றுவதற்கான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

No comments:

Post a Comment