சமையல் எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப ஆகாய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவதாயின் அரசாங்கம் எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து குறைந்தபட்சம் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 'எதிர்க்கட்சியிலிருந்து மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய தந்திரிமலை பிரதேச வைத்தியசாலைக்கு நன்கொடையாக மருத்து உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசாங்கத்திடம் இல்லையென்றால், அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக் கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் தடுக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் நாட்டில் போசாக்கு குறைபாடும் அதிகரித்து வருகிறது. மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment