லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு விமானப்படை ஒரு மில்லியன் ரூபா நன்கொடை - News View

Breaking

Saturday, October 2, 2021

லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு விமானப்படை ஒரு மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரினால் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்திசாலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் "சிறு இதயம் '' எனும் ( Little Heart ) வேலை திட்டத்தின்கீழ் ஒரு மில்லியன் ரூபாய் பணம் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கமைய, விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரணவினால் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்திசாலையின் அபிவிருத்திக்காக இந்த பணத்தொகை வைத்தியசாலையின் Little Heart வேலை திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் துமிந்த சமரசிங்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment